செய்திகள்
உத்தரகாண்டில் மழை

டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை- பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்

Published On 2021-10-18 04:01 GMT   |   Update On 2021-10-18 04:01 GMT
டெல்லியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மற்றும் அதன்  சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உத்தர காண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்திலும்  நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

டெல்லியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. வெப்பநிலை 21 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளது.



இதேபோல் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், வடகிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் கங்கை நதிக்கரையோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News