செய்திகள்
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார்

Published On 2021-10-16 18:47 GMT   |   Update On 2021-10-16 18:47 GMT
பிற நாடுகளுடன் நல்லுறவை மேற்கொள்ளும் பணி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா தொற்று மற்றும் உள்நாட்டு பணிகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் பிற நாடுகளுடன் நல்லுறவை மேற்கொள்ளும் பணியானது மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவை இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக இன்று இஸ்ரேலுக்குச் செல்கிறார்.

அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட், வெளியுறவு மந்திரி எயர் லாபிட் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  ஹுலாடா உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

இந்தியாவும் இஸ்ரேலும் பாரம்பரியமாக நெருங்கிய உறவை மேம்படுத்தி வருகின்றன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது இரு நாடுகளின் நெருங்கிய உறவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News