செய்திகள்
ராகுல் காந்தி

புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைந்தால் பிரதமர் மோடி கோபப்படுவார் - ராகுல் காந்தி

Published On 2021-10-10 20:07 GMT   |   Update On 2021-10-10 20:07 GMT
பிரதமர் மோடி எப்போது மவுனம் காப்பார், எப்போதெல்லாம் கோபப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் காரை விட்டு மோதினர். அதில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என ஐவர் உயிரிழந்தனர். விவசாயிகளின் பதில் தாக்குதலில் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய மந்திரி மகனின் கார் டிரைவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பிரதமர் மோடி எப்போதெல்லாம் மவுனமாக இருப்பார், எப்போது கோபப்படுவார் என விமர்சித்து பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டரில், விலைவாசி, பெட்ரோல் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.,வினர் கொல்லப்படுதலுக்கு பிரதமர் மவுனமாக இருப்பார். கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைந்தால், உண்மையான விமர்சனம் மற்றும் அவரது நண்பர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் பிரதமர் கோப்படுவார் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News