செய்திகள்
சுக்பீர் சிங் பாதல் வந்த கார்

சிரோமணி அகாலி தளம் தலைவர் சென்ற கார் மீது செருப்பு வீசிய விவசாயிகள்

Published On 2021-10-09 10:56 GMT   |   Update On 2021-10-09 12:38 GMT
சுக்பீர் சிங் பாதல் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர்.
ஜலந்தர்:

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு மத்தியில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ‘100 நாட்களில் 100  தொகுதிகளில் யாத்திரை’ என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கினார். இதனால் அவருக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர். கருப்புக் கொடி காட்டுகின்றனர். 


இந்நிலையில், ஜலந்தரில் இன்று சுக்பீர் சிங் பாதல் பயணம் மேற்கொண்டார். அவர் செல்லும் பாதைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையும் மீறி, சுக்பீர் சிங் பாதல் சென்ற கார் மீது, போராட்டக்காரர்கள் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News