செய்திகள்
குழந்தை

கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை பெறும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2021-10-08 05:24 GMT   |   Update On 2021-10-08 05:24 GMT
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ம் ஆண்டில் 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட திருமண வயதுக்கு வராத சிறுமிகள் 10, 613 பேர் பிரசவித்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் வயதுக்கு வராத சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்களை தடுப்பதற்காக கேரள சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இது தொட‌ர்பாக கேரள மாநில அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை எடுத்துள்ள ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 2018 ம் ஆண்டில் 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட திருமண வயதுக்கு வராத சிறுமிகள் 10, 613 பேர் பிரசவித்தனர். இதில் கிராம பகுதியில் 5747 பிரசவம் பதிவானது. மேலும் 5, 239 சிறுமிகளுக்கு ஆபரேசன் செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்தன. இதில் சிறுமிகள் பிரசவ நிகழ்வில் தாய் அல்லது பிறந்த குழந்தைகள் 92 பேர் பலியாகினர்.

மேலும் 20 ஆயிரத்து 597 சிறுமிகள் முதல் குழந்தையையும், 116 சிறுமிகள் இரண்டாவது குழந்தையும், 59 சிறுமிகள் மூன்றாவது குழந்தையும் 16 சிறுமிகள் நான்காவது குழந்தைகளையும் பெற்றெடுத்து உள்ளனர். இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு மேலும் அதிகரித்து உள்ளது.

இது பற்றி சமூக சேவகரும் செயற்பாட்டாளருமான தன்யா ராமன் கூறியதாவது:-

சிறுமிகள் பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கட்டாயமாக கவலை கொள்ள வேண்டும். இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என தவறாக கருதுகின்றனர். இளம் வயதிலேயே குழந்தைகள் திருமணம் நடப்பதும் பிரசவிப்பதால் மன அழுத்த பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து முறையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர் காலத்தில் மிகப்பெரும் சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News