செய்திகள்
சபரிமலை

மண்டல பூஜையின்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினசரி 25000 பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-10-07 23:21 GMT   |   Update On 2021-10-07 23:28 GMT
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16-ம் தேதி திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 17-ம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News