செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 20,799 பேருக்கு தொற்று

Published On 2021-10-04 04:17 GMT   |   Update On 2021-10-04 04:17 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 74, மகாராஷ்டிராவில் 41 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 180 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,997 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையிலும் முழுமையாக ஓயவில்லை.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 702 ஆக உயர்ந்தது.

கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 1.37 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ஒரு வார பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,297, மகாராஷ்டிராவில் 2,692, தமிழ்நாட்டில் 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 74, மகாராஷ்டிராவில் 41 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 180 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,997 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,207, கர்நாடகாவில் 37,819, தமிழ்நாட்டில் 35,650, கேரளாவில் 25,377 பேர் அடங்குவர்.

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து நேற்று 26,718 பேர் மீண்டனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 ஆக அதிகரித்தது.

தற்போதைய நிலவரப்படி 2,64,458 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 6,099 குறைவு ஆகும்.



நேற்று 23,46,176 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 90 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று நாடு முழுவதும் பரிசோதனை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது 9,91,676 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 57.42 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News