செய்திகள்
ஏர் இந்தியா

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதா? - மத்திய அரசு மறுப்பு

Published On 2021-10-01 11:28 GMT   |   Update On 2021-10-01 11:28 GMT
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

அதன்பின், கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பணிகளை முடுக்கிவிட்ட மத்திய அரசு இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில்  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. 

இதற்கிடையே, ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் கூறப்படுவது தவறான தகவல் எனவும், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News