செய்திகள்
கால்பந்து அணி கோல்கீப்பர் அம்ரீந்தர் சிங்

நான் அவன் இல்லை - அமரீந்தர் சிங்கிற்கு அம்ரீந்தர் சிங்கை குழப்பிக் கொண்ட ஊடகங்கள்

Published On 2021-09-30 11:27 GMT   |   Update On 2021-09-30 11:30 GMT
பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கை டுவிட்டரில் டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணி வீரர் அம்ரீந்தர் சிங்கை ஊடகங்கள் டேக் செய்துள்ளன.
புதுடெல்லி:

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த  அமரீந்தர் சிங் உட்கட்சி மோதலால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து. புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.

முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், தான் அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்வதாக கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று அவரது டெல்லி இல்லத்திற்கு சென்று அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். அவர் பா.ஜ.க.வில் சேரப்போவதாக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் டுவிட்டரில் கேப்டன் அமரீந்தர் சிங்கை டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் அம்ரீந்தர் சிங்கை டேக் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பாகிப்போன இந்திய கால்பந்து அணி வீரர் அம்ரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பத்திரிகையாளர்களே, நான் அம்ரீந்தர் சிங், இந்திய கால்பந்து அணி கோல்கீப்பர். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அல்ல, தயவுசெய்து என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.


ஹாக்கி வீரர் அம்ரீந்தரின் டுவிட்டை ரீ டுவிட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங், நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். நீங்கள் விளையாட்டில் முன்னேற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News