செய்திகள்
அமரீந்தர் சிங்

அடுத்த கட்ட நகர்வு என்ன ? சொல்கிறார் அமரீந்தர் சிங்

Published On 2021-09-30 10:38 GMT   |   Update On 2021-09-30 15:27 GMT
பஞ்சாப்பில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சண்டிகர்: 

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையால் ஆட்டம் கண்டுவருகிறது.

கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகினார். இதையடுத்து புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திடீரென்று விலகினார்.

இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தான் பா.ஜ.க.வில் சேரவில்லை. காங்கிரஸ் கட்சியில் தொடரும் எண்ணமும் இல்லை. மூத்த தலைவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.



பஞ்சாப்பில் ஒவ்வொரு காங்கிரஸ்  தலைவரும் முதல் மந்திரியாக  விரும்புகின்றனர். பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
Tags:    

Similar News