செய்திகள்
நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா

Published On 2021-09-28 10:00 GMT   |   Update On 2021-09-28 11:01 GMT
பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது.
பஞ்சாப்:

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

ஒரு மனிதன் எப்போது சமரசங்கள் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.


எனவே, பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன்.

இவ்வாறு அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது சித்துவும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

Similar News