செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

பெங்களூருவில் 11-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Published On 2021-09-28 03:15 GMT   |   Update On 2021-09-28 03:15 GMT
ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் வருகிற 11-ந் தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் கொரோனா காரணமாக 27-ந் தேதி (அதாவது நேற்று) வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கிறது. கொரோனா காரணமாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News