செய்திகள்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லூய்சின்ஹோ பலேரோ

மம்தாவை புகழ்ந்து பேசிய கோவா காங்கிரஸ் தலைவர் விலகல்

Published On 2021-09-27 08:23 GMT   |   Update On 2021-09-27 11:17 GMT
பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் மம்தா பானர்ஜி கடும் சவால் அளித்தவர் என கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ கூறினார்.
பனாஜி:

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த முறை கோவா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

இந்நிலையில், கோவா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசிய சில மணி நேரங்களில் அவர் காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.



‘பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் கடும் சவால் அளித்தவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 200 கூட்டங்களை நடத்தினார். அமித் ஷா 250 கூட்டங்களை நடத்தினார். அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ கெடுபிடியும் இருந்தது. ஆனால், மம்தா பார்முலா வெற்றி பெற்றுள்ளது’ என்று லூய்சின்ஹோ பேசியது குறிப்பிடத்தக்கது.

லூய்சின்ஹோ திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரை  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் மற்றும் பிரசன் பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். 
Tags:    

Similar News