செய்திகள்
கரையை கடந்த குலாப் புயல்

ஒடிசா அருகே கரையைக் கடந்தது குலாப் புயல்

Published On 2021-09-26 18:41 GMT   |   Update On 2021-09-26 18:41 GMT
வங்கக்கடலில் உருவான குலாப் புயல் ஒடிசா அருகே கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தப் புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. 

இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளான விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது பலத்த காற்று வீசியது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.

புயல் பாதிப்புகள் குறித்து இரு மாநில முதல் மந்திரிகளிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார். 

Tags:    

Similar News