செய்திகள்
மம்தா பானர்ஜி

பொறாமையால் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜனதா அனுமதிக்கவில்லை: மம்தா பானர்ஜி

Published On 2021-09-26 11:29 GMT   |   Update On 2021-09-26 11:29 GMT
போப் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் மாநாட்டில், என்னை கலந்து கொள்ள பா.ஜனதா அனுமிக்கவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி பானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். வருகிற 30-ந்தேதி பானிபூர் உடன் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் மம்தா பானர்ஜி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி ‘‘இத்தாலி நாட்டின் ரோமில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள நான் அழைக்கப்பட்டேன். அந்த மாநாட்டில் போப் உள்பட மற்ற மதத்தின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே இந்தியரும், இந்து பெண்மணியும் நான்தான்.

ஆனால், பொறாமை காரணமாக பா.ஜனதா என்னை இத்தாலி செல்ல அனுமதிக்கவில்லை. இது வெளி உலகத்தில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளது.

தனது பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார மையம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்காத நிலையில் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஜோ பைடனை சந்தித்தார்’’ என்றார்.

மேற்கு வங்காள தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் ‘‘இத்தாலியில் நடைபெற இருக்கும் மாநாடு முதல் அமைச்சர்கள் அளவில் உள்ளானவர்கள் கலந்து கொள்வதற்கானது அல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒருவரி செய்தியாக வந்தது’’ என்றார்.
Tags:    

Similar News