செய்திகள்
கோப்புப்படம்

ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து: துணைநிலை ஆளுநர்

Published On 2021-09-26 11:04 GMT   |   Update On 2021-09-26 11:04 GMT
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஸ்ரீநகரில் இருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்றார்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகையில் பேட்டியளித்தார். அப்போது ‘‘ஸ்ரீநகரில் புதிய முனைமம் கட்டப்படும். இதற்காக 1500 கோடி ரூபாயில் செலவிடப்படும். அதேபோல் ஜம்முவிலும் புதிய முனைமம் 600 கோடி ரூபாயில் கட்டப்படும்’’ என்றார்.

துணை ஆளுநர் மனோஜ் சிங்ஹா கூறுகையில் ‘‘மத்திய அமைச்சரும், ஜம்மு-காஷ்மீர் அரசும் விரைவில் ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவிற்கு முதல் சர்வதேச விமானத்தை இயக்க ஒப்புக்கொண்டனர். ஜம்மு விமான நிலையத்தின் ஓடுதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 30 சதவீத சுமை  பெனால்டி நீக்கப்பட்டும். இது விமான நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் மிகப்பெரிய நிவாரணத்தை கொண்டுவரும்.

ஜம்மு காஷ்மீரில் புதிய முனையத்திற்காக 122 ஏக்கர் நிலையம் கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளால் விரைவில் நிலையம் கையகப்படுத்தப்படும். அதில் 25 ஆயிரம் சதுரமீட்டர் முனைமம் கட்டப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News