செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஜோ பைடன்

மோடியிடம் எடுத்துச் சொல்லுங்கள்... ஜோ பைடனுக்கு விவசாய சங்க தலைவர் வேண்டுகோள்

Published On 2021-09-24 11:13 GMT   |   Update On 2021-09-24 14:01 GMT
கடந்த 11 மாதங்களாக நடைபெறும் போராட்டங்களின்போது குறைந்தது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருப்பதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மோடியுடனான சந்திப்பின்போது, விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசும்படி ஜோ பைடனுக்கு விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘அன்புள்ள ஜோ பைடன் அவர்களே, இந்திய விவசாயிகளாகிய நாங்கள், பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறோம். கடந்த 11 மாதங்களாக நடைபெறும் போராட்டங்களின்போது குறைந்தது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். எங்களை பாதுகாக்க, இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது எங்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராகேஷ் திகாயித்.

இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News