செய்திகள்
குதிரை வண்டியில் வந்த சித்தராமையா

கர்நாடக சட்டசபைக்கு குதிரை வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள்

Published On 2021-09-24 07:14 GMT   |   Update On 2021-09-24 07:14 GMT
காங்கிரஸ் தலைவர்களுடன் வந்த தொண்டர்கள், எரிபொருள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மாட்டுவண்டிகளில் சட்டசபைக்கு வந்தனர். சட்டசபையிலும் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகின்றனர். 


அதன் ஒரு பகுதியாக, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று குதிரை வண்டிகளில் சட்டசபைக்கு வந்தனர். அவர்களுடன் கட்சி தொண்டர்களும் அணிவகுத்து வந்தனர். எரிபொருள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
Tags:    

Similar News