செய்திகள்
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

அவங்க சின்ன பசங்க, ஒன்னும் தெரியாது - ராகுல், பிரியங்கா குறித்து அமரீந்தர் சிங் விமர்சனம்

Published On 2021-09-23 18:56 GMT   |   Update On 2021-09-23 18:56 GMT
முதல் மந்திரி பதவியிலிருந்து விலகியதை அடுத்து அமரீந்தர் சிங் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சண்டிகர்:

பஞ்சாப்பில் 10 ஆண்டுகள் முதல் மந்திரி பதவி வகித்தவர் அமரீந்தர் சிங். அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேரூன்ற காரணமான முக்கிய அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது.

இதையடுத்து, அமரீந்தர் சிங் தன்னை காங்கிரஸ் கட்சி அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். மோதல் முற்றவே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.



முதல் மந்திரி பதவியிலிருந்து விலகியதை அடுத்து அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவையும் அமரீந்தர் சிங் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் அரசியல் அனுபவம் அற்றவர்கள். தகாதவர்களால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வென்று முதல் மந்திரி ஆவதை தடுக்க ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News