செய்திகள்
உணவு டெலிவரி செய்யும் செவிலியர்

கொரோனாவால் திசைமாறிய வாழ்க்கை... உணவு டெலிவரி செய்யும் செவிலியர்

Published On 2021-09-23 04:22 GMT   |   Update On 2021-09-23 06:35 GMT
கொரோனா பெருந்தொற்று காரணமாக, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கின்றனர்.
புவனேஸ்வர்:

கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாற்று வேலையை செய்யத் தொடங்கி உள்ளனர். 

அவ்வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த செவிலியர் சஞ்சுக்தா நந்தா(வயது 39), கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்ததால் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார். 



இதுபற்றி அவர் கூறுகையில், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக எனக்கு வேலை இல்லை. எனது கணவருக்கும் வேலை போய்விட்டது. இதனால் குடும்பத்தின் மொத்த வருமானமும் நின்றுவிட்டது. எனவே, உணவு டெலிவரி செய்யும் இந்த வேலையை செய்ய முடிவு செய்தேன்’ என்றார்.
Tags:    

Similar News