செய்திகள்
பெங்களூருவில் ஊரடங்கு கட்டுப்பாடு

பெங்களூருவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு: மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

Published On 2021-09-22 02:54 GMT   |   Update On 2021-09-22 02:54 GMT
திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த முன்பு போலவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், பூஜை நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும்.
பெங்களூரு :

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த முன்பு போலவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், பூஜை நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும்.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவற்றுக்கு அரசு அனுமதி வழங்கிய பிறகு அனைத்து நடவடிக்கைகளும் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.
Tags:    

Similar News