செய்திகள்
நிதின் கட்கரி

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடா? - நிதின் கட்கரி விளக்கம்

Published On 2021-09-21 22:06 GMT   |   Update On 2021-09-21 22:06 GMT
நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதா என்பது குறித்து நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய தரைவழிப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய நெடுஞ்சாலை திட்டங்களில் சமீப காலங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை. மின்சார கார்களுக்கு இறக்குமதி வரியை குறைக்குமாறு அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா கோரிக்கை விடுத்துள்ளது. அதை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து முடிவு எடுக்கும். இந்தியா தனது முதலீடுகளை குறைத்து விட்டு, ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News