செய்திகள்
கோவிஷீல்டு

பயணக் கட்டுப்பாட்டில் பரஸ்பர நடவடிக்கை: இங்கிலாந்துக்கு இந்தியா எச்சரிக்கை

Published On 2021-09-21 16:59 GMT   |   Update On 2021-09-21 16:59 GMT
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் பிரிட்டன் அரசு அக்கறை எடுத்துக் கொள்ளாவிடில் பரஸ்பர நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என இந்தியா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூப் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது.

ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் இங்கிலாந்து அந்த வழிகாட்டு நெறிமுறையை அமல்படுத்தவில்லை.

சமீபத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் எலிசபெத் ட்ரஸ் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்த கட்டுப்பாடு பாகுபாடானது. நாங்களும் இந்தியா வரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய பரஸ்பர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனத்தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டன் நிறுவனம் தயாரித்து லைசென்ஸ் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. பிரிட்டன் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் ஐந்து மில்லியன் டோஸ்கள் பிரிட்டனுக்கு வழங்கியுள்ளோம்.

தேசிய சுகாதார முறைக்கு கீழ் இயங்குகிறது என்பது நாங்கள் புரிந்து கொள்கிறோம். கோவிஷீல்டை அங்கீகரிக்காதது ஒருதலைபட்சமான கொள்ளையாகும். இந்தியாவில் கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட இந்தியர்கள்  இங்கிலாந்து பயணம் செய்யும்போது இதனால் பாதிப்பு எற்படும்.

தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் விருப்பத்தையும் நாங்கள் சில பார்ட்னர் நாடுகளுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், இது பரஸ்பர நடவடிக்கை கொண்டது. இது எப்படி செல்கிறது என்று நாங்கள் பார்க்க இருக்கிறோம். நாங்கள் திருப்தியடையவில்லை என்றால், பரஸ்பர நடவடிக்கையை அமல்படுத்துவோம்’’ என்றார்.
Tags:    

Similar News