செய்திகள்
கோப்புப்படம்

குஜராத்தில் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Published On 2021-09-21 15:41 GMT   |   Update On 2021-09-21 15:41 GMT
ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 டன் எடை கொண்ட ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக  வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நடத்திய சோதனையில்  இரு கன்டெய்னர்களில் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. ஒன்றில் இரண்டு டன் ஹெராயினும், மற்றொன்றில் ஒரு டன் ஹெராயினும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இரு கன்டெய்னர்களும் ஈரானில் இருந்து குஜராத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில்  கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் இது அதிக மதிப்பு கொண்டதாக இருப்பதாகாவும், தற்போது பிடிபட்டது ஹெராயின் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத ஹெராயின் இங்கிருந்துதான் சப்ளை செய்யப்படுகிறது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணம் தேவைப்படும் என்பதற்காக, கடந்த சில வருடங்களாக தலிபான்கள் ஹெராயின் மூலம் அதிக அளவில் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News