செய்திகள்
நைஜீரியாவுக்கு சென்றடைந்த இந்திய தடுப்பூசி (கோப்பு படம்)

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குகிறது மத்திய அரசு

Published On 2021-09-20 11:26 GMT   |   Update On 2021-09-20 13:50 GMT
அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, வெளி நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான  நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது, தடுப்பூசியின் தேவை அதிகரித்தது. எனவே, மார்ச் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. 

அதன்பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அதேசமயம் தடுப்பூசி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், வேக்சின் மைத்ரி திட்டத்தின்கீழ் உலகிற்கு உதவுவோம் என்றும், நான்காம் காலாண்டில், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க உள்ளதாகவும் கூறினார். 

‘அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உற்பத்தி மேலும் அதிகரிக்கும். பயோலாஜிக்கல்-இ மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றன’ என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
Tags:    

Similar News