செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக 19,653 பேருக்கு கொரோனா

Published On 2021-09-19 12:49 GMT   |   Update On 2021-09-19 12:49 GMT
கேரளாவில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 26,711 பேர் மீண்டுள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். 1,73,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில்  புதிதாக இன்று மேலும் 19,653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,73,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று 26,711 பேர் டிஸ்சார்ஜ் ஆக, இதுவரை 43,10,674 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று 152 பேர் உயிரிழக்க, இதுவரை 23,591 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,13,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் 17.34 ஆகும்.
Tags:    

Similar News