செய்திகள்
நீரில் மூழ்கி பலி

ஜார்க்கண்டில் சோகம் - விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது தண்ணீரில் மூழ்கி 7 பேர் பலி

Published On 2021-09-18 18:11 GMT   |   Update On 2021-09-18 18:11 GMT
ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை குளத்தில் கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
சண்டிகர்:

நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான திரிபுரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர்.

புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டிடக் கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கான தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா. 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேர் மாவட்டம், பிக்ரு கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று காலை விஸ்வகர்மா சிலையை அப்பகுதி மக்கள் அரைத்தனர். அப்போது சிறுமி உள்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News