செய்திகள்
கொரோனா வைரஸ்

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு- நாடு முழுவதும் புதிதாக 34,403 பேருக்கு தொற்று

Published On 2021-09-17 08:15 GMT   |   Update On 2021-09-17 08:15 GMT
நாடு முழுவதும் நேற்று 63,97,972 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 77 கோடியே 24 லட்சம் டோஸ்களை தாண்டி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 34,403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 81 ஆயிரத்து 728 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 4 நாட்களுக்கு முன்பு 15 ஆயிரமாக குறைந்தது.

தொடர்ந்து 2 நாட்கள் தினசரி பாதிப்பு 15 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 17,681 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது. அங்கு புதிதாக 22,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மகாராஷ்டிராவில் 3,595, தமிழ்நாட்டில் 1,693, ஆந்திராவில் 1,367, கர்நாடகாவில் 1,108, மிசோரத்தில் 1,171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் 178, மகாராஷ்டிராவில் 45 பேர் உள்பட 320 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,44,248 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,322 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 37,950 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரத்து 424 ஆக உயர்ந்தது. தற்போது 3,39,056 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 63,97,972  தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 77 கோடியே 24 லட்சம் டோஸ்களை தாண்டி உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 15,27,429 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News