செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 25,404 பேருக்கு தொற்று

Published On 2021-09-14 04:29 GMT   |   Update On 2021-09-14 07:46 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 99 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 339 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 579 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் வரை இருந்தது. நேற்று 15 ஆயிரமாக குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 2,740, தமிழ்நாட்டில் 1,580, கர்நாடகாவில் 673, ஆந்திராவில் 864 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 99 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 339 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,38,169 பேர் அடங்குவர்.

புதிய பாதிப்பை விட நாள்தோறும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 37,127 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 84 ஆயிரத்து 159ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 3,62,207 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 2.09 லட்சம் பேர் உள்ளனர்.



கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 78,66,950  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 22 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 14,30,891 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 54.44 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News