செய்திகள்
தீப்பிடித்து எரியும் வாகனங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

Published On 2021-09-08 15:23 GMT   |   Update On 2021-09-08 15:23 GMT
திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
அகர்தலா:

திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும் கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது. 

பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.
Tags:    

Similar News