செய்திகள்
வருண்காந்தி

விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்: வருண்காந்தி வலியுறுத்தல்

Published On 2021-09-06 02:14 GMT   |   Update On 2021-09-06 02:14 GMT
விவசாயிகள் நமது சொந்த ரத்தமும், சதையும் போன்றவர்கள். அவர்களின் வேதனைகளையும், கருத்துகளையும் புரிந்து கொண்டு, கருத்தொற்றுமையை ஏற்படுத்த இணைந்து செயல்பட வேண்டும்.
புதுடெல்லி :

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு 10 சுற்றுகளாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

விவசாய சங்கங்கள் அடங்கிய கிசான் சம்யுக்தா மோர்ச்சா சார்பில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நேற்று நடந்தது.

இந்த சூழ்நிலையில், பா.ஜனதா எம்.பி.யும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முசாபர்நகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர். அவர்கள் நமது சொந்த ரத்தமும், சதையும் போன்றவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அவர்களின் வேதனைகளையும், கருத்துகளையும் புரிந்து கொண்டு, கருத்தொற்றுமையை ஏற்படுத்த இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News