செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகின்றனர் - ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Published On 2021-09-04 17:44 GMT   |   Update On 2021-09-04 17:44 GMT
விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கி வரும் ஆசிரியர் சமூகத்திற்கு நன்றி என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

தலைசிறந்த கல்வியாளர், தத்துவஞானி மற்றும் முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கவுரவிக்க விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள்.

கொரோனா தொற்றின்போது ஆசிரியர்கள் பின்பற்றிய கற்பித்தல் வழிமுறையும் மாபெரும் மாற்றத்தைச் சந்தித்தது. ஊரடங்கின்  போது இணையவழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 

மாணவர்களுக்கு தங்குதடையற்ற கல்வியை வழங்க தரமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கிவரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News