செய்திகள்
மம்தா பானர்ஜி

துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை வைக்க முடிவு- பா.ஜனதா கடும் எதிர்ப்பு

Published On 2021-09-04 04:00 GMT   |   Update On 2021-09-04 04:00 GMT
மம்தாவுக்கு மிகவும் விருப்பமான வெள்ளை புடவை மற்றும் ரப்பர் செருப்புடன் கூடிய அவரது சிலை உருவாகி வருகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான துர்கா பூஜை அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்படும் நிலையில், தற்போதே அங்கு சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.

அதாவது துர்கா பூஜைக்கான பந்தலில், துர்கா தேவியின் சிலையுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சிலையும் வைத்து பூஜை செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பிரபல சிற்பியான மிண்டு பால், மம்தாவின் சிலை செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளார். மம்தாவுக்கு மிகவும் விருப்பமான வெள்ளை புடவை மற்றும் ரப்பர் செருப்புடன் கூடிய அவரது சிலை உருவாகி வருகிறது.

துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களின் இந்த நடவடிக்கை பா.ஜனதாவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பாவி வங்காளிகளின் ரத்தம் தோய்ந்த கரத்துக்கு சொந்தக்காரரான மம்தாவை தெய்வத்துக்கு நிகராக வைப்பது குமட்டலை ஏற்படுத்துவதாகவும், இது துர்கா தேவியை அவமதிப்பதாகவும் கட்சியின் ஐ.டி. துறை தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இதைப்போல நந்திகிராமில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரியும் இந்த விவகாரத்தில் மம்தாவின் மவுனத்தை கேள்வி எழுப்பி உள்ளார்.
Tags:    

Similar News