செய்திகள்
டிகே சிவக்குமார்

60 ஆண்டுகளில் சேர்த்த சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: டி.கே.சிவக்குமார்

Published On 2021-09-02 02:46 GMT   |   Update On 2021-09-02 02:46 GMT
கர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 60 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட சொத்துகள், இன்று பா.ஜனதா அரசு விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள்.

சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 36 பேர் இறந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் கூட இறக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. காங்கிரசும் தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News