செய்திகள்
பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்

திடீரென இடிந்து விழுந்த டேராடூன் பாலம்- ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்

Published On 2021-08-27 13:15 GMT   |   Update On 2021-08-27 13:15 GMT
டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் டேராடூன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஜக்கான் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. முக்கியமான வழித்தடம் என்பதால், அந்த பாலத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். பாலம் திடீரென இடிந்ததால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்த பாலம் இடிந்து விழுந்ததால் டேராடூன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

இதேபோல் மால்தேவ்டா-சகஸ்திரதாரா இணைப்பு சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர் மழையால் தபோவன்-மலேதா நெடுஞ்சாலை மூடப்பட்டது. நிலச்சரிவு காரணமாகவும் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News