செய்திகள்
சித்தராமையா

மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு அதிகாரம் இல்லை - சித்தராமையா

Published On 2021-08-13 03:48 GMT   |   Update On 2021-08-13 03:48 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் கடந்த 74 ஆண்டுகள் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டும். நாட்டில் முக்கியமான நாட்களை நாம், சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடுகிறோம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனாவால் நாட்டில் 50 லட்சம் பேர் இறந்திருப்பார்கள். கர்நாடகத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருக்கும். ஆனால் மாநில அரசு இறப்புகளை குறைத்து காட்டுகிறது.

மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கோ அல்லது கேரளாவுக்கோ இல்லை. கர்நாடகத்தின் நலன்களில் அக்கறை இருந்தால் சி.டி.ரவி, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News