செய்திகள்
பாராளுமன்றம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி... மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Published On 2021-08-11 06:09 GMT   |   Update On 2021-08-11 06:09 GMT
கடும் அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி உள்ளன. 

இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவ்வாறு விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதன் காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரை 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு, நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News