செய்திகள்
சிஆர்பிஎப் வீரர்கள் கொண்டாட்டம்

நீரஜ் சோப்ராவின் சாதனையை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

Published On 2021-08-07 14:00 GMT   |   Update On 2021-08-07 14:00 GMT
அரியானா மாநிலம், பானிபட்டில் நீரஜ் சோப்ராவின் வீட்டிற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
ஸ்ரீநகர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 

இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.  பானிபட்டில் நீரஜ் சோப்ராவின் வீட்டிற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணி புரிந்துவருவதால், அவரது சாதனையை ராணுவ வீரர்கள்  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள், தேசியக் கொடிகளை அசைத்தும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடினர்.
Tags:    

Similar News