செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் சனிக்கிழமைகளிலும் அரசு மதுபான கடைகளை திறக்க அனுமதி

Published On 2021-08-07 05:14 GMT   |   Update On 2021-08-07 05:14 GMT
கேரள மதுபான கழகத்திற்கு சொந்தமான மதுபான கடைகளை வார விடுமுறை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் திறந்து பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 19,948 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் கேரள அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு  மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மதுபான கழகத்திற்கு சொந்தமான மதுபான கடைகளை வார விடுமுறை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் திறந்து பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

மதுபானங்களை கடைகளில் இருந்து வாங்கி செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது  சனிக்கிழமைகளிலும் அரசுக்கு சொந்தமான மதுபான கடைகள்  திறக்கவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News