செய்திகள்
மனைவி சில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் சமூக நலனுக்கு தீங்கானவை: கோர்ட்டு கருத்து

Published On 2021-08-04 02:05 GMT   |   Update On 2021-08-04 02:05 GMT
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஜாமீன் கேட்டு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மும்பை :

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஆகியோரை ஆபாச படம் எடுத்து, செல்போன் செயலியில் பதிவேற்றிய வழக்கில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அவர்கள் ஜாமீன் கேட்டு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுவை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு எஸ்.பி. பாஜ்பாலே விசாரித்தார்.

இதில் விசாரணையின் போது அவர், "வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சமுதாய நலனுக்கு தீங்கு ஏற்படுத்துவதாகும். விரிந்த சமூக பரிமாணத்தை கொண்ட குற்ற விசாரணையில், சமூகநலனை கவனிக்க முடியாது. கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த விசாரணையின் போதே
ராஜ்குந்த்ரா
வின் கைது சட்டப்படியானது தான் என்ற முடிவுக்கு கோர்ட்டு வந்துவிட்டது. மேலும் விசாரணை அதிகாரியும் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கூறிவிட்டார்.

இந்த சூழலில் குற்றம்சாட்ட நபர் ஜாமீன் கொடுக்க தகுதியானர் அல்ல. மேலும் நீதிமன்ற காவலில் அடைப்பதால், போலீஸ் விசாரணை முடிந்தது என அர்த்தம் இல்லை. குற்றம்சாட்டபட்டவர் பல தகவல்களை அழித்து உள்ளார். எனவே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அந்த ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது’’ என கூறி ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோர் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து 2 பேரும் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையிடு செய்து உள்ளனர். ஐகோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது.
Tags:    

Similar News