செய்திகள்
கோப்புப்படம்

மிக்சிங் கொரோனா தடுப்பூசிக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை: மத்திய அரசு

Published On 2021-08-03 15:19 GMT   |   Update On 2021-08-03 15:19 GMT
கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸாக கோவிஷீல்டு செலுத்த பரிந்துரை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கேவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு முறை செலுத்திக் கொள்ள வேண்டும். கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நபர்கள், 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.

கோவிஷீல்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்களுக்குப்பிறகு 2-வது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட அதே தடுப்பூசியைத்தான் 2-வது டோஸின்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதல் டோஸாக கேவேக்சின் எடுத்துக் கொண்டால், 2-வது டோஸாக கோவிஷீல்டு எடுத்துக் கொள்ளக்கூடாது. கடந்த வாரம், இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம், மிக்சிங் தடுப்பூசி பரிசோதனைக்கு பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அதுபோன்ற எந்த பரிந்துரைகளும் வழங்கப்படவில்லை என்றார். தடுப்பூசிகள் சமீபத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. மிக்சிங் தடுப்பூசி குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலக சுகாதார அமைப்பும் எந்த பரிதுரையும் செய்யவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News