செய்திகள்
வைரஸ் பரப்பும் கொசு

ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்... மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை அனுப்பியது மத்திய அரசு

Published On 2021-08-02 10:58 GMT   |   Update On 2021-08-02 10:58 GMT
ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என புனே மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.
மும்பை:

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரளாவில், ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களின் மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 60க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் கேரளாவில் பரவி வருவதால், கேரளா- தமிழக எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பரவி உள்ளது. புனே நகரில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து அந்த பெண் குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். எனினும், ஜிகா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜிகா வைரஸ்
பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.

எனினும், நிலைமையை கண்காணிக்கவும், ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகளுக்கு உதவவும் மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை அனுப்பி வைத்துள்ளது.

Tags:    

Similar News