செய்திகள்
மாநிலங்களவை

பாராளுமன்றத்தில் தொடரும் அமளி... இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

Published On 2021-08-02 10:29 GMT   |   Update On 2021-08-02 10:29 GMT
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் உள்நாட்டு போக்குவரத்து கப்பல்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் உறுப்பினர்களின் இடையூறு காரணமாக முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 2 மணி, 3:30 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் உள்நாட்டு போக்குவரத்து கப்பல்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை இந்த மசோதா உறுதி செய்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் 3:36 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News