செய்திகள்
கொரோனா பரிசோதனை

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு

Published On 2021-08-01 00:43 GMT   |   Update On 2021-08-01 00:43 GMT
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பெங்களூரு:

கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு  ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பயணிக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

கேரளம் மற்றும் மகாராஷ்டிராவிற்குள் எந்தவொரு பயணியும் நோய்த் தொற்றுடன் நுழையக் கூடாது என்பதை ரெயில்வே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேருந்து நடத்துனர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே பயணிகளை அனுமதிக்க வேண்டும். மருத்துவக் காரணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News