செய்திகள்
இந்தியா சீனா பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா இடையே 12வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது

Published On 2021-07-31 00:05 GMT   |   Update On 2021-07-31 00:05 GMT
இந்தியா மற்றும் சீனா இடையிலான பேச்சுவார்த்தை மூன்றரை மாத இடைவெளிக்கு பின்னர் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது.

இதையடுத்து, இரு தரப்பும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணிக்கு அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ எல்லை முனையில் நடக்கிறது.

எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 
Tags:    

Similar News