செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது

Published On 2021-07-29 09:07 GMT   |   Update On 2021-07-29 09:07 GMT
கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 286, கேரளாவில் 131, ஒடிசாவில் 69 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 640 பேர் இறந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 43,92,697 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இது வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45 கோடியே 7 லட்சத்தை கடந்துள்ளது.

இதில் 35.25 கோடி பேருக்கு முதல் டோசும், 9.81 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,509 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 114 ஆக உயர்ந்தது.

கேரளாவில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் 22 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதியானது. அங்கு புதிதாக 22,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் 6,857, ஆந்திராவில் 2,010, தமிழ்நாட்டில் 1,756, கர்நாடகாவில் 1,531, ஒடிசாவில் 1,703, அசாமில் 1,276, மணிப்பூரில் 1,003 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 286, கேரளாவில் 131, ஒடிசாவில் 69 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 640 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,22,662 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,32,145, கர்நாடகாவில் 36,456, தமிழ்நாட்டில் 33,995, டெல்லியில் 25,049, உத்தரபிரதேசத்தில் 22,755 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 38,465 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 1 ஆயிரத்து 612 ஆக உயர்ந்தது.

தற்போது 4,03,840 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 27-ந் தேதி இந்த எண்ணிக்கை 3.98 லட்சமாக இருந்தது. தொடர்ந்து 2 நாட்களாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுகாதாரத்துறையினரை கவலையடைய செய்துள்ளது.
Tags:    

Similar News