செய்திகள்
மக்களவை

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Published On 2021-07-28 10:19 GMT   |   Update On 2021-07-28 12:53 GMT
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டதுடன், பேப்பர்களையும் பதாகைகளையும் சபாநாயகரின் இருக்கை நோக்கி வீசினர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் ஆகிய விவகாரங்களை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த அமளி காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்படுகின்றன. இன்றும் பாராளுமன்றத்தல் அமளி நீடித்தது. அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்ட உறுப்பினர்கள், பேப்பர்களையும் பதாகைகளையும் சபாநாயகரின் இருக்கை நோக்கி வீசினர். உறுப்பினர்களின் செயலால் சபாநாயகர் கடும் அதிருப்தி அடைந்தார். 

சபாநாயகரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணிக்கம்  தாகூர், ஜோதி மணி உள்பட 10 எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்கால செயல்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News