செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 93 சதவீதம் பாதுகாப்பானது

Published On 2021-07-28 05:06 GMT   |   Update On 2021-07-28 05:06 GMT
கோவிஷீல்டு தடுப்பூசி 98 சதவீதம் இறப்பினை குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது.

இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 93 சதவீதம் பாதுகாப்பானது. 98 சதவீதம் இறப்பினை குறைக்கிறது என தெரிய வந்துள்ளது. இது ஆயுதப்படைகள் மருத்துவ கல்லூரி நடத்திய ஆய்வின் முடிவு ஆகும்.



இந்த முடிவினை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த ஆய்வு டெல்டா வைரசால் இயக்கப்படுகிற கொரோனா வைரசின் 2-வது அலையின்போது நடத்தப்பட்டது” என தெரிவித்தார்.


Tags:    

Similar News