செய்திகள்
மக்களவை

தஞ்சை உள்பட 2 உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசியமயமாக்கும் மசோதா நிறைவேற்றம்

Published On 2021-07-26 11:26 GMT   |   Update On 2021-07-26 11:26 GMT
பெகாசஸ் விவகாரம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்புவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதேபோல் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்புவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா-2021 நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவானது, தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரியானா மாநிலம் குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்க வகை செய்கிறது. 
Tags:    

Similar News