செய்திகள்
சிகரெட்

சிகரெட் விற்பனை 33 சதவீதம் அதிகரிப்பு

Published On 2021-07-25 09:59 GMT   |   Update On 2021-07-25 09:59 GMT
கொரோனா காலத்தில் பல்வேறு பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ள நிலையில் சிகரெட் விற்பனை மட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் சிகரெட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக ஐ.டி.சி. உள்ளது. இந்தியாவில் விற்கப்படும் 4-ல் 3 சிகரெட் இந்த நிறுவனத்தை சேர்ந்தது ஆகும்.

அந்த வகையில் சிகரெட் ஏகபோக விற்பனையாளராக ஐ.டி.சி. நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் சிகரெட் மட்டுமல்லாமல் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் (எப்.எம். சி.ஜி.), ஓட்டல் தொழில் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. அதாவது இது 28 சதவீதம் அதிகமாகும். மொத்தத்தில் ஐ.டி.சி. நிறுவனத்துக்கு ரூ.12,950 கோடி வருமானம் கிடைத்தது. வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்ட செலவுகள் போக ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது.



கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை எப்போதோ எட்டி விட்டதாகவும், தொடர்ந்து வளர்ச்சியில் இருப்பதாகவும் ஐ.டி.சி. நிறுவனம் கூறி உள்ளது.

ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை சிகரெட் உற்பத்திதான் முக்கியமாக உள்ளது. சிகரெட் விற்பனை மட்டுமே 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளது. அதாவது கடந்த காலாண்டில் ரூ.5,129 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. ரூ.3,280 கோடி லாபம் கிடைத்துள்ளது.

விற்பனை 33 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு என்றே அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. அதிவேக நுகர்வு பொருள் விற்பனையில் ரூ.173 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது. இதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.




Tags:    

Similar News